விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் அரசு சார்பில் முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இடத்தை இதுவரை பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை இந்த விலையில்லா மனப்பட்ட தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த தகுதியான பயனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மனை பட்டா சம்பந்தமாக தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இடத்தை அளந்து அவர்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று அந்தப் பகுதிக்கு அளவீட்டார்கள் வருவதாக கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நாங்கள் கொடுத்த வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது என்றும் தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடட்டனர்.
ஆனால் திட்டமிட்டபடி நேற்று அளவிட்டாளர்கள் மனையை அளப்பதற்கு வரவில்லை இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை எடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.