ஏர்வாடியில் உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் திடீர் மரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது பாகிம் (17) என்ற மாணவன், ஏர்வாடியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு இவர் ஏர்வாடி தைக்காவில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

​உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
​ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் முகம்மது பாகிம் பரிதாபமாக உயிரிழந்தார். உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மயக்கத்தால் மாணவன் மரணமடைந்த இச்சம்பவம் ஏர்வாடி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​சிறு வயதிலேயே உடற்பயிற்சியின் போது பள்ளி மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான சரியான காரணம் குறித்து மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *