கோவை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின் குறிச்சி நகர பகுதியில் கவுண்டபாளையம் சட்டமன்றத் தொகுதி தலைவர் என்.கே.ஆர் ராஜா ராமச்சந்திரன் மற்றும் கவுண்டபாளையம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் எஸ்.கே.சந்தானகுமார் ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சியின் கவுண்டபாளையம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் எஸ்.கே.சந்தானகுமார் கவுண்டபாளையம் சட்டமன்றத் தொகுதி தலைவர் என்.கே.ஆர் ராஜா ராமச்சந்திரன் கூறுகையில்
கடந்த முறை இளைய வேந்தர் ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கியதாகவும் பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினோம்
தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு ஐம்பெரும் விழாவாக பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம் எனவும்
இதில் முக்கிய சிறப்பம்சமாக கோவை மாவட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கவுண்டபாளையம் சட்டமன்றத் தொகுதி முன்னோடியாக திகழ்ந்து நலத்திட்ட உதவிகள் கொடுத்து வருவதாக கூறியவர் குறிப்பாக பெண்களுக்கு தையல் இயந்திரம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்ததாகவும்
பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஆண்களுக்கு வேஷ்டிகள் வழங்கியதாகவும் குழந்தைகளுக்கு ஆடைகள் விளையாட்டு பொருட்கள் வழங்கி உள்ளதாகவும்
குறிப்பாக வரும் நாட்களில் கல்வி நலத் திட்ட உதவி, முதியோருக்கு நலத் திட்ட உதவி, ஊனமுற்றவர்களுக்கு நல திட்ட உதவி என்று பல்வேறு நலத் திட்ட உதவிகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்
நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளிக் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மரக் கன்றுகள் வழங்கியதாக கூறினர்.
இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் உட்பட 300″க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.