கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா :
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் உலக மகளிர் தினம், சமூக சேவகர்களுக்கு பாராட்டு, கவியரங்கம், வாழ்த்தரங்கம் , புதிய புரவலர்கள் அறிமுகம் ஆகிய விழாக்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ம.ரா. சிங்காரம் தலைமையில் நடைபெற்றது, கிளை நூலக வாசகர் வட்ட ஆலோசகர், ஓய்வு பெற்ற தலைமை கண் மருத்துவர்
தெ. கேசவன் முன்னிலை வகித்தார், கிளை நூலக வாசகர் வட்டதுணைத்தலைவர் கௌ. செ. குமார் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில் நிலைய மருத்துவர் மரு. கவிதா டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மைய நூலக அலுவலர் க. முருகன், ஓய்வு பெற்ற கலால் மற்றும் சுங்கத் துறை இணை ஆணையர் பாவலர் சு. சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்,
திருமதி சி.இமாகுலேட், கவிதாயினி கவிமனோ, ஜெ.ஜோதி, கவிஞர் கலைச்செல்வி, ச. வனிதா, ரேவதி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர், ரத்த சுத்திகரிப்பு பிரிவு, ரத்த சேமிப்பு வங்கி ஆகியோர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது, பாச்சுடர் காரை. பழ. ஆறுமுகம், கவிதாயினி.கவிமனோ, கவிஞர் ஜெகரட்சகன்,கவி.ரஹீமா,கவிஞர் ந. ஜெயபால்,கவிஞர் அன்பன்சிவா, கவிஞர் தீந்தமிழன் என்கிற பிரபாகரன், கவிஞர் பரசுராமன், கவிஞர் ஜோதி,கவிதாயினி கலைச்செல்வி ஆகிய கவிஞர்கள் மகளிர் தின கவிதை வாசித்தார்கள், ர. தனுஷ்க்கண்ணன், துரை. சுந்தரபாண்டியன்,அ. கருணாமூர்த்தி, கி.வஜ்ரவேலு, அ. கு. நடராஜன், பா. ஜெயராமன், நல். அன்பழகன் , எஸ் முருகானந்தம் ஆகியோர் புதிய புரவலர்களாக சேர்ந்து கொண்டார்கள், ஓய்வு பெற்ற இனை இயக்குனர் நலப் பணிகள் மரு. ஆ. கோவிந்தராஜன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ம.விஜய் ஆனந்த் தம்பையா, நிலைய மருத்துவ அலுவலர் மரு. எஸ். கவிதா, இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக நிர்வாக அலுவலர் ஜெ. முருகவேல், ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் பெ.நல்லதம்பி, ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ச.ராம்குமார், ஓய்வு பெற்ற அலுவலக கண்காணிப்பாளர் கவிஞர் கே.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியராக திட்ட இயக்குனர் இராச. வேலுமணி, ஓய்வு பெற்ற முதுகலை கல்வி வேளாண் அறிவியல் ஆசிரியர் கவிஞர் குறிஞ்சி ந. இரவி, கடலூர் மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் அரங்க. அருள்ஒளி, ஓய்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் துரை. சுந்தரபாண்டியன், நூலக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் ஓவியர் க. மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் ஆலோசகராக கவிஞர் குறிஞ்சி ந. இரவி, பொருளாளராக ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கவிஞர் ந. ஜெயபால், ஒருங்கிணைப்பு செயலாளராக பி. பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் இறுதியில் கிளை நூலக வாசகர் வட்ட செயலாளரும், கிளை நூலகரமான வெ. பார்த்தீபன் நன்றி கூறினார்.