கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் அமைந்துள்ள எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏழாம் ஆண்டு விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. தாளாளர் தீபக் தாமஸ், தலைமையில்,முதல்வர் டாக்டர். சுகிர்தா தாமஸ், இணைஇயக்குநர் பவித்ரா தீபக் மற்றும் தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் முன்னிலையில் மங்கல இசைமுழங்க இறைவணக்கத்துடன் தொடங்கியது, தமிழ் ஆசிரியர் பாக்கியசாமி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, பட்டிமன்ற பேச்சாளர், வழக்கறிஞர் அருண்,கலந்துகொண்டு மாணவர்களுக்கு படிப்பில் சிறந்து விளங்க, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரையை வழங்கி சிறப்பித்தார். பள்ளியின் துணைமுதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள் ஐஷ்வர்யா, இனியா ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினார்கள். விழாவில் மழலைகளின் வரவேற்பு நடனம், பரதநாட்டியம், இசை, மெழுகு நடனம், மவுனமொழி நடனம், குழு நடனம், பஞ்சாபி நடனம், கராத்தே, சிலம்பம் மற்றும்மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்
பலரும் கலந்துகொண்டனர், விழாவில் மேலும் படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், தாளாளர் மற்றும் முதல்வர் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர். இறுதியாக அறிவியல் ஆசிரியை. விஜயலட்சுமி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.