கரூர் செய்தியாளர் மரியான் பாபு

பாமக தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய ஆதரவளித்த அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து கரூர் பாமக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்..


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் த.பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


வன்னியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இ.வை.பசுபதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பூ.ஆ.குணசீலன்,மாநில செயற்குழு உறுப்பினர் செ.ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் வாங்கல் சதீஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மலைமுத்து, மாவட்ட சமூகநீதி பேரவை வழக்கறிஞர் கவின், மாவட்ட மாணவரணி செயலாளர் வினோத் நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், பாமக கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி உரை கூறினார்.
மார்ச் 11ம் தேதி புதன்கிழமை திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கு, கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


தொடர்ந்து, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவளித்த அதிமுக கூட்டணி கட்சிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையாக உழைத்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கரூர் மாவட்ட துணைத் தலைவர் கொங்கு செந்தில், அரங்கம் சதீஷ் , கரூர் மாநகர துணைச் செயலாளர்கள் மார்க்கெட் வரதராஜன், மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சண்முகம், செயலாளர் சு.நாகராஜன், மாவட்ட இளைஞரணி முத்துசாமி, மாவட்ட இளைஞரணி அவைத்தலைவர் பொன்னுசாமி, மாணவரணி நிர்வாகிகள் தீபக்,மௌனேஷ் , சமூக ஊடகப்பிரிவு பேரவை செயலாளர் தவிகை கவின் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *