திருத்துறைப்பூண்டி.,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கிராமத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இன்று தீமிதி விழாவையொட்டி பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து பக்தர்கள் அழகு காவடி, செடியில் காவடிகளும், பெண்கள் பால்குடங்களும் எடுத்து வந்தனர்.
பின்னர் அருகில் அமைக்கப்பட்டிருந்தால் அக்கினி குண்டத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.