மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை தந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத் தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை மேற் கொள்ள உள்ளது. மத்திய ரிசர்வ் படையினரை மதுரை சரக காவல் துணைத்தலைவர் அபினவ்குமார், மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் மற்றும் காவல் அதிகாரிகள் வரவேற்றனர்.


பின்பு மதுரை மாவட்டம் குறித்தும், மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்தும், மாவட்டத்தில் மக்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் முறை குறித்தும் மதுரை சரக காவல் துணைத்தலைவர் அபினவ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையினரிடம் கலந்துரையாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *