மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழை இலை கள் மதுரை சுற்றியுள்ள பகுதி களான மேலூர் கூத்தியார் குண்டு, திருப்புவனம் வத்தலக் குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சமீபத்தில் பொங்கல் பண்டிகையின் போது வாழை இலை (கட்டு ஒன்று 200 இலைகள்) ரூ.4000 வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் விஷேசங்கள் இல்லாத தால் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது.


இதனால் வாழை இலையின் வரத்து குறைந்துள்ளது. எனினும் தற்போது விஷேச நாட்கள் இல்லாததால் ஏற்றம் இல்லாமல் உள்ளது. இதனால் தற்போது ஒரு கட்டு வாழை இலை ரூ.1200 முதல் ரூ.1500 வரை மட்டுமே விற்பனை செய்யப் படுகிறது. குறைந்த பட்ச
மாக ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்ப டுகிறது.


இதுகுறித்து வியாபாரி கள் கூறுகையில், ‘தற்போது பண்டிகை இல்லாததால் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் அதிக வெயிலின் தாக்கத்தால் வாழை இலை வரத்து குறைந் துள்ளது. வரும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் அம்மன் கோயில்கள் சித்திரை திருவிழாக்கள் வர உள்ளதால் பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அதிகளவில் வாங்குவர். இதனால் வரும் நாட்களில் வாழை இலையின் விலை உயர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *