தென்காசி மார்ச் 10 –

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும் (10.03.2026) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் T.P.S. தலைமையில், 02 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர், 05 காவல் ஆய்வாளர்கள், 05 சார்பு ஆய்வாளர்கள், 10 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், 40 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர், 25 காவலர்கள், 20 ஆயுதப்படை காவலர்கள் புளியங்குடி எலுமிச்சை சந்தையில் இருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரையிலும், சங்கரன்கோவில் அண்ணா புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி அசெம்பிளி சந்திப்பு, கழுகுமலை ரோடு வழியாக மீண்டும் அண்ணா புதிய பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *