மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மதுரை கிழக்கு வட்டார அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார்.

இப்பள்ளியில் இதற்கு முன்பு பணிபுரிந்த இருபது முன்னாள் ஆசிரியர் களுக்கு பள்ளியின் நினைவு பரிசாக சுழற்கேடயம் வழங்கப்பட்டது இதில் வரிச்சூர் பொதுமக்கள் எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பழைய மாணவர்கள் அவர்கள் நினைவாக பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கினர்.குழந்தைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றகுழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவரையும் மேயர் நாகராஜ் பாராட்டி
பொன்னாடை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *