மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2026-சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை நேற்று தொடங்கி வைத்து, சுய புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கெளாள்ள தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “இந்தியாவின் பாரம்பரியத்தையும் சுதந்திராமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்த குடிமக்களாகிய நாம் மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது பிற காரணங்களால் பதிக்கப்படாமல் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி வாக்களிப்போம்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயபுகைப்பட பதாகை (Selfie Stick) அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரும் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிடவும்,100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, துண்டுபிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *