அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.
இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு தனி ஆலயம் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது
இக்கோவிலில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாழில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா,கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலிக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பூசணி மற்றும் தேங்காய் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.
தேய்பிறை அஸ்டமியான இன்று அதிகாலை கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று. ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பளித்தனர்