வடபாதிமங்கலம்., மார்ச். 12
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இடம் ஓகைப்பேரையூர் கிராம பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கோரிக்கை வைத்து பேசினார். அப்போது தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட சுமார் ரூ 35 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ.வி .குமரேசன் உள்ளிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின் மாணவ, மாணவியர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி மாணவ மாணவியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து பழையனூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பில் ரூ 3 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ வி குமரேசன் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.