மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜெய் அபினாஷ் என பெயர் சூட்டினார்.
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி தாம்பரம் மேற்கு பகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுதி கழகச் செயலாளர் கோபிநாதன் முன்னிலையில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஐ கே எஸ் நாராயணன், 51 வது வடக்கு வட்டக் கழக செயலாளர் டாக்டர் VE.சுரேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
முன்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜெய் அவினாஷ் என அம்மாவின் நினைவோடு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தினார்
பின்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் அன்னதானமும் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, மாவட்ட பொருளாளர் பரசுராமன் தாம்பரம் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உள்ளிட்ட மாவட்ட கழக பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்