புதுச்சேரி, உப்பளம்:

2.0 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணைத் தொகைக்கான பணி ஆணைகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுதர்சன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி, கள ஆய்வாளர் சக்திவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, காங்கிரஸ் ராஜ்குமார், கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன், ராகேஷ், கழக சகோதரர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏழை, எளிய மக்களின் வீட்டு கனவை நனவாக்கும் வகையில் இந்தத் திட்டம் பெரும் பயனளிக்கும் என நிகழ்ச்சியில் பேசினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *