கொரடாச்சேரி

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விசா மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் பலர் போலி முகவர்கள் மூலம் ஏமாற்றம் அடைந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதிலும் குறிப்பாக தமிழகத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏராளமானோர் பாதிக்கப்படுவது குறித்து அறிந்த பிரிட்டன் துணை தூதரகம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இராரா தொண்டு நிறுவனம் மற்றும் இந்தியா மைகிரேசன் நவ் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் இராரா நிறுவனத்தின் தமிழ்நாடு- பாண்டிச்சேரி மாநில தலைமை ஆலோசகர் லியாண்டர் பயஸ் தலைமையில் போலி விசா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், அங்கன்வாடி ஊழியர்கள் , மற்றும் அரசு பணியாளர்கள் கொண்ட குழுவினருக்கு போலி விசா கண்டறிவது குறித்து க்யூ ஆர் கோடு உதவியுடன் சாட் ஜி பி டி வழியாக விசாவை சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டது .

மேலும் இந்த தகவலை பொதுமக்களுக்கு கொண்டு செல்லவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா மைக்ரேஷன் நவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரியன்ஷா சிங் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *