திருவாரூர்.

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கேன்களில் வாங்கி சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டார் .

தற்போது இதன் எதிரொலியாக திருவாரூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் பாட்டில் மற்றும் கேன்களில் வழங்கப்படாது என்ற ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கேன்களில் வாங்கி செல்ல கூடாது என விதிமுறைகளை மீறி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வழங்கப்பட்டு வந்த நிலையில் பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையிலும் பாதுகாப்பை கருதி பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் டீசல் தரப்படாது என்ற வாசகம் பொருத்திய போஸ்டர் பெட்ரோல் பங்குகளில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *