மன்னார்குடி., மார்ச்.12
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 8 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 18 நாட்கள் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரத்தில் பலவிதமான வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று ஐந்தாம் நாள் விழாவாக பல்வேறு விதமான ஐந்து தலைகளைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் ராஜகோபால சுவாமி வில்லேந்தும் ராமர் கோலத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மன்னார்குடி யானை வாகன மண்டபத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி வீதி உலா கண் கவர் வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.