திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் அமராவதி ஆற்றுப்பாலம் ஈஸ்வரன் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தாராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாராபுரம் எல்லிஸ் நகர் தொகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் கோகுல் 22, தாராபுரம் மேற்கு பஜனை மட தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மகன் பாலயுவராஜ் 22, தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் பிரபு 20 இவர்கள் மூவரும் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
மூன்று நபர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறைக்கு அடைத்தனர்.