பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மக்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து நடைபயிற்சியில் கலந்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த நடைபயிற்சி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வந்தடைந்தது.
இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு உடல்நலன் மேம்பாட்டிற்கான நடைபயிற்சியை மேற்கொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக பரப்பிரம்மம் பவுண்டேஷன் தாளாளர் முத்துக்குமார், குமார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஏற்பாடுகளில் ஒத்துழைத்தனர்.
“நடப்போம் நலம் பெறுவோம்” திட்டம் மூலம் பொதுமக்களிடம் நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்த முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.