ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.!

காங்கயம்,ஊதியூர் அருகே, கிராவல் மண் கடத்திச் சென்ற 2டிப்பர் லாரிகளை சுரங்கத்துறை ஏஜி மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
காங்கயம், ஊதியூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் தங்குதடையின்றி கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்தால் மண் கடத்தல் சில நாட்கள் நிற்கும். பின்னர் தொடர்ந்து நடக்கும். இந்த பகுதிகளிலிருந்து பல்லடம், திருப்பூர் பகுதிகளுக்கு கிராவல் மண் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் (ஏஜி) வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் ஊதியூர் அருகே வீணம்பாளையம் காடையூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அவற்றில் கிராவல் மண் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையின்போது 2லாரிகளின் டிரைவர்களும் வண்டியிலிருந்து குதித்து ஓடிவிட்டனர்.


இதையடுத்து 2லாரிகளையும் கிராவல் மண்ணுடன் ஊதியூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று போலீஸ் வசம் ஓப்படைத்தனர். ஏஜி வெங்கடேசன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மண் கடத்திச் சென்ற லாரிகளின் உரிமையாளர்கள் யார், லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் யார், எங்கிருந்து மண் கடத்தப்படுகிறது என்பன பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *