தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் 15453 பயனாளிகளுக்கு ரூபாய் 64.96 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் மாவட்ட வன அலுவலர் கிரண் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் நகர மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி பி ஏ மிதுன் சக்கரவர்த்தி பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *