திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி முதல்வர் சி. ஏழுமலை தலைமை தாங்கினார். துணை முதல்வர் ப. முருகன் வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன் திலிப் ஷா பங்கேற்று சிறப்புரை ஆற்றி, கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆர். ராதிகா ஸ்ரீ, டி.எச்.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *