நாமக்கல் –

சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு  ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு  சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 75 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் (CRPF ) கடந்த திங்கள்கிழமை வந்திருந்தனர்.

  நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் துணை ராணுவம் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை வாக்காளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நாமக்கல் மாநகரத்தில் இன்று துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

  நாமக்கல் பூங்கா சாலையில் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் துணை ராணுவத்தினர் 75 பேர் கலந்து கொண்டு முக்கிய சாலைகள் வழியாக சென்று இறுதியாக துறையூர் சாலையில் உள்ள நாமக்கல் காவல் நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *