வேப்பூர் மார் – 13

கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுத்தாசலம் அருகிலுள்ள வேப்பூர் அருகே சேப்பாக்கம் எல்லையில் திருநாவுக்கரசர் மடம் உள்ளது

இந்த மடத்தின் அருகே காலை முதல் டிஎன் 12 டி 0369 என்ற எண்ணுள்ள காரில் ஆட்கள் யாரும் இல்லாமல் வெகு நேரமாக நின்று கொண்டுள்ளது

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் அதன் பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர் அதில் தடை செய்யபட்ட 419 கிலோ பான் குட்கா பொருட்கள் இருந்தது

திடீரென்று கார் பழுதாகி நின்றுள்ளது அதனால் காரில் வந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர் போலிசார் காரில் இருந்த 419 கிலோ குட்காவையும் காரையும் வேப்பூர் காவல் நிலையம் எடுத்து வந்து காரையும் குட்காவையும் பறிமுதல் செய்தனர் அதனை தொடர்ந்து கார் யாருடையது என்றும் காரில் குட்கா கடத்தி வந்தவர்கள் யார் என்றும் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *