தருமபுரி –

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் ஆ. மணி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தருமபுரி ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் இணைந்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் வரும் 2026 – ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில், சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டியப் பிரசாரப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தமிழ்நாட்டின் மண், மானம், மொழியைக் காக்கும் ஜனநாயகப் போரில், பாசிச – அடிமை சக்திகளை வீழ்த்தி, நம் தலைவர் ஸ்டாலின் தலைமையில், கழகத்தை ஏழாவது முறையாக அரியணை ஏற்றுவோம் – வரலாறு படைப்போம். இந்த கூட்டத்தில் அனைத்து சார்பணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *