திருவொற்றியூர தொகுதி,மணலி மண்டலம் 22 வது வார்டு, தேவராஜன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில்  450 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர் 

இங்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் 8 வகுப்பறைகள் கட்டப்பட்டது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை அடுத்து மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் தேவேந்திரன், கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் திறக்கப்பட்ட பள்ளியில் கல்வெட்டு திறந்து குத்து விளக்கேற்றி மாணவ,மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *