சென்னை திருவொற்றியூர் சாய் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் 13 திருவொற்றியூர் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் துணைவியார் கஸ்தூரி சங்கர் ஆகியோர் இணைந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழாவினை தனது திருக்கரங்களால் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்கள் புடவை பழங்கள் மஞ்சள் குங்குமம் இனிப்பு வகைகள் கார வகைகள் மற்றும் தலா ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வழங்கப்படும் உணவுகளான தயிர் சாதம் ,கருவேப்பிலை சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், பாயாசம், வாழைப்பழம், பெங்காலி ஸ்வீட், அப்பளம், வெள்ளை சாதம்,சாம்பார் ரசம் பொரியல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது

இதனை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் மற்றும் அவரது துணைவியார் கஸ்தூரி அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பரிமாறினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகாஷ் மருத்துவமனை இயக்கு னர் மருத்துவர் செல்வராஜ் குமார்,மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ் குமார் குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் மற்றும் நூறு கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். திமுக தலைமைக் கழக பேச்சாளர் வாசு கருணாநிதி மகேந்திரன் டைலர் மணி குடியரசு போட்டோ செந்தில்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *