திருவாரூர். செய்தியாளர் வேலா, செந்தில்
திருவாரூர் அருகே பள்ளி மாணவர்கள் ஏசி உள்ளிட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு எடுத்து வந்து வழங்கி அசத்தினர்.
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைபள்ளியில் 420 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியாக ஜெயந்தி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு பெஞ்சு, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் போதுமானதாக இல்லை இத்தகவலறிந்த பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை அளிக்க தீர்மானித்தனர்.
இதையடுத்து சேகரிக்கப்பட்ட டேபிள் நாற்காலிகள், ஏசி மிஷின், குடிநீர் சுத்திகரிப்பு கருவி, , பேன் உட்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பள்ளியில் வழங்கப்பட்டது.
முன்னதாக அங்குள்ள காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது இதனையடுத்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன தொடர்ந்து மேளதாளம் முழங்க ஆலயத்திலிருந்து பேரணியாக பொருட்களை சீர்வரிசை போல எடுத்து வந்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.
இதில், திமுக ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.