கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தமிழகத்தில் பங்குணி சித்திரை மாதங்களில் அம்மன் கோவில்களில் அம்மனை வழிபாடு செய்ய ஆண் பெண் ஆன்மீக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இதன்படி தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மாசி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கெளமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மாசி கடைசி வெள்ளிக்கிழமையையடுத்து ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் கம்பம் நகர் மற்றும் இதனைச் சுற்றியுள்ள ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்