திருவாரூர்., மார்ச்.14
சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டை சேர்ந்த சுந்தரவளாகம் கட்டபொம்மன் தெருவில் வசிக்கும் 71 பயனாளிகள் மற்றும் வைப்பூர் கிராமத்தை சேர்ந்த 28 பயனாளிகளுடன் மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூபாய் 1,48,64940 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் அரசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.