பட்டுக்கோட்டையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியில், நகராட்சி சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனை கடந்த பிப்.15ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
ஆனால், துணை முதல்வர் திறந்து ஒரு மாதமாகியும், பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் வந்து செல்லும் சாலை வசதியும் போதிய அளவில் இல்லாத நிலையிலும், கட்டுமானங்கள் முடியாத நிலையிலும் அவசர கதியில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் பஸ் ஸ்டாண்டில் உள்புற கட்டடத்தி்ல், மேற்கூரையின் சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.