மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்பரூ 67 லட்சம்  இழப்பீடு தொகையை வழங்க  நீதிபதி உத்தரவிட்டார்.

மன்னார்குடி., மார்ச் 14

தமிழகம் முழுவதும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக் அதாலத்’ விசாரணை , இன்று நடைபெற்று வருகிறது .

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி முத்துராமன் தலைமையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள்,

காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதில்  பல வழக்குகள் முடித்து ரூ 67 லட்சம்  இழப்பீடு தொகையை வழங்க சார்பு நீதிபதி முத்துராமன் உத்தரவிட்டார்.   

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *