சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவன் கோவில் உள்ளது,இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் நான்கு அடியில் முதலை உலா வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்,
மேலும் குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வீடியோ பதிவு மூலம் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்,
ஏற்கனவே நெடுங்குன்றம் ஊராட்சிக்குடபட்ட ஆலப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகள் அருகே உள்ள குள்ளதில் ஏராளமான முதலைகள் இருப்பதால் அவ்வப் போது வெளியேறி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்,இது குறித்து வனதுறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள்ளனர்.