தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 17வயது சிறுமி குடும்பத்திற்கு பாஜக சார்பில் முன்னாள் எம். பி. சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் மீனாதேவ், முன்னாள் மாநில மகளிரணி தலைவி உமாரதிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர் ஆறுதல் கூறினர்

இதனை தொடர்ந்து முன்னாள் எம். பி. சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் இது 39 வது சம்பவம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் என இரண்டு பெண்கள் இருக்கும் இந்த மாவட்டத்தில் இது போன்ற அராஜகம் நடைபெற்றுள்ளது. அவர்கள் பெண்களுக்கு உண்மையில் மரியாதை கொடுப்பவர்களாக இருந்தால் இரண்டு பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்

14மணி நேரமாக வழக்கு பதிவு செய்ய அலைக்கழித்து ஐந்து நாட்களாகியும் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத துப்பில்லாத திமுக ஆட்சி.பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் பணம் தேவையில்லை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

மகளைப் பறிகொடுத்த தாயை பார்த்து விட்டு வருகிறோம். அந்தத் தாயின் கண்ணீருக்கு திமுக அரசாங்கமோ கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் பதில் கூறுவீர்களா..முதல்வர் மு க ஸ்டாலின் இதுவரை வந்து பார்க்கவில்லை

நிர்பையா வழக்கினை அவ்வளவு பேசுகிறோம்

இந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல தமிழக முதல்வர் வரவேண்டும். இல்லையென்றால் திமுகவிற்கு பெண்கள் வாக்கு கிடைக்காது

புகார் கொடுக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் ரொம்ப அவமானமாக பேசியுள்ளனர்காவல்துறை உடனடியாக தேடி இருந்தால் அந்த சிறுமியை பாதுகாத்து இருக்கலாம்300 மீட்டர் தூரத்தில் தான் அந்த சடலம் கிடைத்துள்ளது அதுவும் அவரது உறவினர்கள் தான் கண்டுபிடித்துள்ளனர்அப்படி என்றால் தமிழகத்தில் காவல்துறை எதற்கு காவல் நிலையம் எதற்கு காவல்துறையின் கையை திமுக அரசு கட்டிப்போட்டு உள்ளது. திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பெண்கள் அரசு நடத்துகிறீர்கள் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்.ஒவ்வொரு பெண்ணையும் தமிழகத்தில் பலி கொடுக்க தயாராக இல்லை

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாதுஇந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தூத்துக்குடியில் இருந்து சூலுரை தூத்துக்குடி மண் வீரமிக்க மண் இங்கு ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு தமிழகத்தில் ஒவ்வொரு பெண்ணும் பாடம் புகட்டுவார்கள் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *