மன்னார்குடி.,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மேலும் அதனை தொடர்ந்து இக்கோவிலில் 18 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 7 ஆம் நாளான இன்று இராஜகோபாலசுவாமி இராஜ அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்துருளினார்.

யானை வாகன மண்டபத்தில் பல டன் எடை கொண்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய புஷ்ப பல்லக்கில் இராஜ அலங்காரத்தில் இராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக இராஜகோபாலசுவாமி ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தார்.

முக்கிய விழாக்களான தங்கு சூரிய பிரபை விழா வரும் 17ஆம் தேதியும், தங்க கருட சேவை 19ஆம் தேதியும், மார்ச் 23ஆம் தேதி வெண்ணெய்தாழி உற்சவமும் நடைபெற உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *