செங்குன்றம் செய்தியாளர்
மார்.15
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாக
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசரகால பேரிடரின் போது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் மாதவரம் தீயணைப்பு துறை அலுவலர் முத்துவீரன் செங்குன்றம் அலுவலர் சீனிவாசன் தண்டையார்பேட்டை அலுவலர் பற்குணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு செய்முறை போலி ஒத்திகை பயிற்சியில்
பல அடுக்குகளைக் கொண்ட உயரமான கட்டிடங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனவும் தீயணைப்புத் துறையினர் தம்மை எப்படி காப்பாற்ற முன் வருகிறார்கள் என்பது பற்றியும் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ பற்றி எரிவதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது பற்றியும் மாடிகளில் வசிக்கும் பொதுமக்களை கயிறு மூலம் மீட்கும்
ஒத்திகை நிகழ்ச்சியை செய்முறை விளக்கம் மூலம் நடத்திக் காட்டினார்கள் .
மேலும் மழைக்காலத்தின் போது படகுகளில் சென்று மக்களை காப்பாற்றியும் மரங்கள் சாலைகளில் விழுந்தால் உடனே அதனை அகற்ற உதவும் கருவிகளையும் பேரிடர் காலங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குண்டான நவீன கருவிகளை பொதுமக்களிடம் காண்பித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரின் சாகசங்களை பார்த்து பரவசமடைந்து நன்றி கூறினார்கள்.