கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் அதிமுக வால்பாறை நகர துணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன் சார்பாக வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பானை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டது
அதைத்தொடர்ந்து எடப்பாடியாரின் தலைமையிலான மக்கள் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் தீவிர தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் சண்முகவேல், வார்டு செயலாளர்கள் கொங்கு மாரிமுத்து, எஸ்.கே.எஸ்.பாலு, எம்.ஆர்.ஏஸ்.மோகன், பிரமேஷ் மற்றும் பூத் செயலாளர் பழனிச்சாமி, ஜெயின்குமார்,பாண்டித்துரை, பச்சையப்பன், செல்லப்பாண்டி மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்