செங்குன்றம் செய்தியாளர்

இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகள் மண்பானையில் நின்று 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றியும் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது..

சென்னை மணலி தாலி துல்காணம் பகுதியில் அமைந்துள்ள கிட்ஸ் மழலையர் பள்ளியின் சார்பாக மன்பானை மேல் நின்று மழலையர்கள் சிலம்பம் சுழற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள 25 குழந்தைகள் மண்பானை மேல் நின்று சுமார் 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி உலக சாதனையை நிகழ்த்தினர்.

மேலும் மழலையர்கள் திருக்குறள் 1330 குறளையும் மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். தமிழ்நாடு சிலம்பாட்டக் கலை இணை செயலாளர் ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்வை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழை பள்ளியின் தாளாளர் ராதா அவர்களிடம் வழங்கினார்.
மேலும் உலக சாதனையில் கலந்து கொண்ட அனைத்து மழலையர் குழந்தைகளுக்கும் சான்றிதழும் கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *