மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகள் தொடர் தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டு வருகிறது இப்போரினால் சமையல் கேஸ் தட்டுப்பாடு தற்போது நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு அடைந்து வருகிறது மேலும்
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வந்த உணவகங்கள் வர்த்தக கேஸ் சிலிண்டர் விநியோகம் இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்து மூடப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பரவலாக ஏழை மக்கள் அன்றாட பயன்படுத்தும் சிலிண்டர் சப்ளை பாதிப்பு அடைந்து வருகிறது என்றும்
இந்திய அரசு வெளியுறவு கொள்கையில் செயலிழந்து காணப்படும் டப்பா இஞ்சின் அரசை கண்டிக்கும் வகையில் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் திராவிட கழகம் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.