தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெரகொடஅள்ளி காமராஜர் சிலை முன்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயி சங்கம் தலைவர் ஜெயபால் மற்றும் சரவணன் ஆகியோர் தலைமையில்ம50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரி நீரை 66 ஏரிகளுக்கு நிரப்ப ரூ.400 கோடி ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட்டது ,
தற்போது வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது , இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இத்திட்டம்
அறிவிப்பு செய்த நாளிலிருந்து இன்று வரை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருந்து வருகிறது என்றும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து திட்டத்தை செயல்படுத்தாத அரசை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இத்திட்டத்தை செயல்படுத்த முடியாவிட்டால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணிப்போம் என்ற பிளக்ஸ் பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிகழ்ச்சியில் ஆனந்தன் ரமேஷ் ரமேஷ் ரகுமணி விமலன் அருணகிரி மணி தீத்தான் உள்ளிட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.