மொறப்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
கல்பாக்கம்,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் 13-ம் தேதி மதுராந்தகம் அடுத்த மொறப்பக்கம் கிராமத்தில், மேம்படுத்தபட்ட களப்பணிக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் சீதாலட்சுமி மற்றும் ரியல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் லாரன்ஸ், டாப்கு பேபி, பபிதா,பரணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கங்காதாரன்,துணை தலைவர் விஜயலக்ஷ்மி ராஜா, ஊராட்சி செயலாளர் ஆராமுது,
தலைமை திட்ட மேலாளர் மணிகண்டன், மதுராந்தகம் அரசு மருத்துவமனை, நம்பிக்கை மையம் ஜேம்ஸ் சங்கீதா, கற்பக விநாயகா மருத்துமனை மருத்துவர்கள் அமுதராணி, பிரபாகரன், அக்ஷய், நிஷாந்த், சாம், சுமித்ரா, மொபைல் நம்பிக்கை மையம் இயக்குனர் ஆயுப்கான், ஆய்வக நுட்பனர் அர்ச்சனா, மக்கள் நல பணியாளர் மனோகர், கிராம சுகாதார செவிலியர் அனுசியா, பணியாளர்கள் அஞ்சலி, ரிசா சம்ரீன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கண்,தோல், பொது மருத்துவம், பால்வினை நோய்,எச். ஐ. வி,கல்லீரல் அழற்சி போன்ற நோய்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.150 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.