செங்கல்பட்டு

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சண்முகம் சாலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலின் அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கினார்.

மாவட்ட கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கணிதா சம்பத்,ப தன்சிங், இன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தனபால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பி கே பரசுராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பாஜக, அமமுக, தமிழ்மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொண்டர்களும் நிர்வாகிகளும் மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்றால் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஆட்சி அறையினையில் ஏற வேண்டும் என கூறினார்

இறுதியாக திமுக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *