,தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி உதவி தொகை வழங்குவது போன்ற சமூகம் சார்ந்த சமூக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி பொருளாதராத்தில் பின்தங்கிய,மற்றும் விதவை பெண்கள் உள்ளிட்ட ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,பெரிய கடை வீதி ஜமேஷா தர்கா அருகில் வணிக வளாக கட்டிடத்தில் நடைபெற்றது..
தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் கிளாசிக் பூபதி,பொது செயலாளர் ரியாசுதீன்,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,, கோவை மாவட்ட நிர்வாகிகள் கோல்டு முஸ்தபா,கோல்டு அப்சல்,கோல்டு தன்சில்,யாசர்,லைவ் அசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
இதில் அரிசி,சமையல் எண்ணெய்,பருப்பு,மசாலா பொருட்கள் உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை சாமான்கள் தொகுப்பு வழங்கப்பட்டது…