அதிமுகவுடன் நான் பேசுவேன் என்று எப்படி உங்களால் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க முடிகிறது. எப்படி இந்த மாதிரி கேள்வி கேட்கிறீர்கள் ஏன் இந்த கேள்வி வருகிறது..? என்று திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கோபத்துடன் பதிலளித்தார்

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறும்போது….

திமுக கூட்டணியில் ஓரிரு நாட்களில் சுமுகமான முறையில் தொகுதி பங்கீடு நிறைவு பெறும். நடிகர் விஜய் சிபிஐ விசாரணை என்று வெளியே சொன்னாலும் விஜய் அவர்களை பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு கொண்டு போவதற்கான ஒரு மறைமுகமான பேச்சு வார்த்தை என்பதும் அழுத்தம் என்பதும் பாரதிய ஜனதா கட்சியின் தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிறது

என்பது தான் பொதுவான செய்தி. கடந்த காலத்திலேயே சில கட்சிகளை அமலாக்கத்துறை பயன்படுத்தி இழுப்பது, சில கட்சிகளுக்கு வருமான வரி துறை சம்பந்தமாக நிர்பந்தம் கொடுத்து இழுப்பது, சில கட்சிகளில் வழக்குகளை காட்டி இழுப்பது போன்றவற்றை வாடிக்கையாக பாரத ஜனதா கட்சி வைத்துள்ளது. விஜய் அவர்களை பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு கொண்டு வருவதன் மூலமாக அந்த அணியை வெற்றி பெற செய்ய முடியும் நோக்கத்தோடுதான் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இந்த கரூர் வழக்கை அவர்கள் அதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் விஜய் அவர்களை பொறுத்தவரை அங்கு போய் சிக்கிக் கொண்டார் என்றால் அவருடைய அரசியல் எதிர்காலம் என்பது இதோடு அஸ்தமனம் ஆகிவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. விஜய் தனித்து ஆட்சிமைப்பார் அவரும் முதலமைச்சராக வருவார் ஒரு நல்ல ஆட்சி தருவார் என்ற நம்பிக்கையில் தான் இளைஞர்கள் அவருக்கு ஆதரவு தருகிறார்கள்.

பத்தோடு பதினொன்றாக அதிமுக பாஜகவுடன் அணி சேர்ந்தால், இந்த ஆதரவு தளர்ந்து விடும். அவருக்கு எதிராக வேறு ஒரு அணிக்கு தான் இந்த வாக்குகள் சென்றடையும். மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் யார் இல்லை யார் வெளியேறுவார்கள் என்பது வெறும் பூடகமாக இருக்கிறது.

இப்போது இருக்கிற அணி திமுகவை தோற்கடிக்க முடியாது என்ற அச்சத்தில்தான் விஜயை பாரதிய ஜனதா கட்சி தங்கள் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகிறது என்றார். இதை விஜய் அவர்கள் தான் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து நலத்திட்டங்கள் தொடங்கி வைத்ததை பற்றிய கேள்விக்கு தமிழ்நாட்டு மக்களை பொருத்தவரை இது மாதிரி தேர்தல் வந்தால் உள்துறை அமைச்சர் மத்திய அமைச்சர்கள் வருவது வாடிக்கையாக செய்து கொண்டிருக்கிற ஒரு வேலை தேர்தல் முடிந்து விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு இங்கு வந்து பார்க்க மாட்டார்கள்.திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என உறுதிபட தெரிவித்தார்.

திமுகவுடன் இந்த கூட்டணி தொடருமா.?இல்லை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அதற்கு அவர் அளித்த பதில்…

பத்திரிகையாளர்களிடம் எப்படி உங்களால் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க முடிகிறது.? அதிமுகவுடன் நான் பேசுவேன் என்று எப்படி உங்களால் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க முடிகிறது. ஐந்தாண்டு காலமாக திமுகவுடன் முரண் பட்டிருப்போம். எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து எப்படி இந்த மாதிரி கேள்வி கேட்கிறீர்கள் ஏன் இந்த கேள்வி வருகிறது..? என்று கோபத்துடன் பதிலளித்தார்

பேட்டி : பெ. சண்முகம் – சிபிஎம் மாநில செயலாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *