தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அழிக்கத் தொடங்கினர்..
சென்னை திருவொற்றியூர் பகுதியில் எண்ணூர் விரைவு சாலை பகுதியில் பல்வேறு கட்சியைச் சார்ந்த விளம்பர போஸ்டர்களை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் அழித்து வருகின்றனர்..
நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத் சட்டமன்றத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில் அதற்காக தேர்தல் ஆணையம் கட்சி விளம்பரங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளனர் இதை அடுத்து திருவத்தூர் தொகுதியில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அதிகாரிகள் கட்சி போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட வந்தனர்,