திருவாரூர்., மார்ச் 17

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி விஷ்ணுபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை திருவாரூர் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் 50 ஆயிரம் பணத்தை தவறவிட்டார்.

இவருக்கு பின்னால் சைக்கிளில் வந்த, தொழுவனங்குடி பவித்ரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி வயது 74 என்பவர் ஒட்டி வந்த சைக்கிள், பாலாஜி தவற விட்ட பணத்தின் மீது ஏறி இறங்கியது.

இதனையடுத்து சைக்கிளை விட்டு கீழே இறங்கிய சுந்தரமூர்த்தி, கீழே கிடந்த பணத்தை எடுத்து கொண்டு தான் வேலை பார்க்கும் சீனு இன்வெஸ்ட்மென்ட் முதலாளியிடம் தகவல் கூறியுள்ளார்.

முதலாளியின் அறிவுறுத்தலின் படி சுந்தரமூர்த்தி தான் எடுத்த பணத்தை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைப்பதற்காக திருவாரூர் நகர காவல் நிலையம் வருகை தந்தார்.

ஆனால் அதற்கு முன்னதாக பணம் காணவில்லை என்று அதே காவல் நிலையத்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

பாலாஜி புகார் அளித்த சமயத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு சுந்தரமூர்த்தி வந்ததால், அங்கிருந்த காவலர்கள் சுந்தரமூர்த்தி வாயிலாகவே பணத்தை தவறவிட்ட பாலாஜியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கீழே கிடந்த பணத்தை எடுத்துக் கொடுத்த முதியவர் சுந்தரமூர்த்திக்கு காவலர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் பணத்தை தவறவிட்ட பாலாஜியும் பணத்தை எடுத்துக் கொடுத்த சுந்தரமூர்த்தியும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *