திருச்சி பெரிய கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜியபுரம் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் ஆலோசனைகளை வழங்கினார்.
புகார் அளிக்க வரும் பொதுமக்களை எவ்வாறு அணுகுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு வழக்கு பதிவு செய்வது, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வார ஓய்வு அளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை அவர் எடுத்துரைத்தார்.
க.மாரிமுத்து.