திருவாரூர்., மார்ச் 17
திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையானது ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ஒரு வீடியோகிராபர் வீதம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்வது மற்றும் ரூ 10 ஆயிரத்திற்கு மேல் பொருளாக உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் போது அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட வடபாதிமங்கலம் பகுதியில் கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தீபன் என்பவரது தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் சென்ற திருவாரூரை சேர்ந்த சேகர் என்பவரது மகன் கரிகாலன் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் எடுத்து சென்றார். அதனை பறிமுதல் செய்து திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் சத்யாவிடம் ஓப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் திருவாரூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள் உடன் இருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *